

திருநெல்வேலி: பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. ஏ காலனியைச் சேர்ந்தவர் முத்துக் குமாரசாமி (52). தனியார் தொலைக்காட்சி நிருபராக பணியாற்றி வந்தார்.
தாழையூத்து பகுதியில் நேற்று முன்தினம் இரவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது குறுக்கே நாய் பாய்ந்ததால், நிலை தடுமாறி சாலையின் நடுவேயுள்ள தடுப்புச் சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த முத்துக் குமாரசாமி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாழையூத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் இரங்கல்: முத்துக் குமாரசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் முத்துக் குமாரசாமியின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லஞ்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.