சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்த நோயாளிகள் மீட்பு

படங்கள் எஸ்.குருபிரசாத்
படங்கள் எஸ்.குருபிரசாத்
Updated on
1 min read

சேலம்: சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (புதன் கிழமை) காலை எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது. துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு அருகே மேல் மாடியில் உள்ள ஆபரேஷன் தியேட்டர் அருகே உள்ள ஏசி எந்திரத்தில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக பெருமளவு புகைமூட்டம் எழுந்து அருகிலுள்ள அவசர சிகிச்சை வார்டு பகுதிகளில் பரவத் தொடங்கியது.

தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த மருத்துவமனை ஊழியர்களும் , நோயாளிகளுடன் தங்கி இருந்தவர்களும் உடனடியாக நோயாளிகளை அவசர சிகிச்சை பிரிவு வார்டில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். இதனிடையே மருத்துவமனை வளாகத்துக்கு அருகிலேயே உள்ள மருத்துவமனை வளாக போலீஸாரும், செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு படை வீரர்களும் மருத்துவமனைக்குள் வந்து தீ , புகை மூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தகவல் அறிந்து மருத்துவமனை டீன் மணி மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா உள்ளிட்டோர் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்தனர். காலை நேரம் என்பதால் அசம்பாவிதம் ஏதுமின்றி தீ விபத்து ஏற்பட்ட அவசர சிகிச்சை வார்டில் இருந்த நோயாளிகள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in