மாநில கல்லூரியில் வி.பி.சிங் சிலை: நவ. 27-ம் தேதி முதல்வர் திறக்கிறார்

மாநில கல்லூரியில் வி.பி.சிங் சிலை: நவ. 27-ம் தேதி முதல்வர் திறக்கிறார்
Updated on
1 min read

சென்னை: உத்தர பிரதேச முதல்வராகவும், மத்திய நிதி, பாதுகாப்பு, வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் வி.பி.சிங். தேசியமுன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி கடந்த 1989-ம் ஆண்டுநாட்டின் பிரதமரானார். 11 மாத அவரது ஆட்சியில் பல்வேறு சாதனைகள் புரிந்தார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசுப் பணியில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார். இந்நிலையில், கடந்த ஏப்.20-ம் தேதி சட்டப்பேரவையில்முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘சமூக நீதி காவலர் வி.பி.சிங்குக்கு மரியாதை செலுத்தும் விதமாக சென்னையில் அவரது முழு உருவசிலை அமைக்கப்படும்’’ என்று 110 விதியின்கீழ் அறிவித்தார்.

இதையடுத்து, வி.பி.சிங் பிறந்த தினத்தில், சென்னை மாநில கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கையை ஏற்று, அக்கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் முழு உருவ சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதன் அடிப்படையில் மாநில கல்லூரி வளாகத்தில் சிலை அமைப்புதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், வரும் நவ.27-ம்தேதி திங்கள்கிழமை மாநில கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங்சிலையை முதல்வர்ஸ்டாலின் திறக்கிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதிகட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in