Published : 21 Nov 2023 06:20 AM
Last Updated : 21 Nov 2023 06:20 AM

புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? - தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி பகுதிகளில் ஆய்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: பள்ளி, கல்லூரி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை - குட்காபொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்டறிய தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு, காவல் துறை இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்காஉள்ளிட்ட பொருட்கள் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனைசெய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் உணவு பாதுகாப்பு துறையினர் காவல் துறையுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்களைக் கொண்டு 19 குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழகம் முழுவதும் 247 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை சுற்றியுள்ள உணவு வணிக நிறுவனங்கள், கடைகள், வாகனங்கள் ஆகியவற்றில் வாரத்துக்கு 3 நாட்கள்குழுவினர் ஆய்வு மேற்கொள் வார்கள். கடந்த அக். 29-ம் தேதி முதல்உணவு பாதுகாப்பு துறையினர் காவல் துறையுடன் இணைந்து தமிழகம் முழுவதும் 3,211 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 173 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்காஉள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டு, 428 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 12 நாட்களில் மட்டும் 88 கடைகளின் உரிமம், பதிவுச் சான்று ரத்து செய்யப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட புகையிலைமற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்த புகார்களை TN Food Safety Consumer App அல்லது 9444042322 என்னும் எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாகவும் பதிவு செய்யலாம். அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x