Published : 21 Nov 2023 04:06 AM
Last Updated : 21 Nov 2023 04:06 AM
ராமநாதபுரம்: சவுதி அரேபியாவில் போலீஸாரால் பிடித்துச் செல்லப்பட்ட தனது கணவரை மீட்க வேண்டும் என, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி மனு அளித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா முள்ளி முனை கிராமத்தைச் சேர்ந்த சமய காந்த் மனைவி நந்தினி ( 29 ). இவர் சவுதி அரேபியாவில் தவிக்கும் தனது கணவரை மீட்க வேண்டும் என, தனது 3 குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நேற்று நடந்த ஆட்சியரின் மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் மனு அளித்தார்.
இது குறித்து நந்தினி கூறியதாவது: எனது கணவர் சமயகாந்த் (35), கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சவுதி அரேபியா நாட்டில் ஜூபைல் என்ற பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். கடந்த 9-ம் தேதி எனது கணவரை அந்நாட்டு போலீஸார் சந்தேகத்தின் பேரில் பிடித்துச் சென்றதாக, 5 நாட்களுக்குப் பிறகு எனது கணவருடன் தொழில் செய்து வரும் சக மீனவர்கள் தொலைபேசி மூலம் எனக்கு தெரிவித்தனர்.
என்ன காரணத்துக்காக எனது கணவரை போலீஸார் பிடித்துச் சென்றனர் என்ற தகவல் தெரியவில்லை. நானும் எனது 3 குழந்தைகள், மாமனார், மாமியார் ஆகியோர் எனது கணவரின் உழைப்பில்தான் வாழ்ந்து வருகிறோம். எனவே, எனது கணவரை மீட்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT