

ஈரோடு: ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் திமுக இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டுமென ஈரோடு மாவட்ட திமுக அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், வீட்டுவசதித்துறை அமைச்சருமான சு.முத்துசாமி, வடக்கு மாவட்டச் செயலாளர் என்.நல்லசிவன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை: ஈரோடு மாவட்ட திமுக சார்பில், பெருந்துறை சரளை பகுதியில் இன்று ( 21-ம் தேதி ) காலை, கட்சியின் மூத்த நிர்வாகிகள் 2,500 பேருக்கு, பொற்கிழி வழங்குதல், திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம்,
பெருந்துறை சிப் காட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சி ஆகியவற்றில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில், கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் நிகழ்ச்சியில் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.