சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக சென்னை - கோட்டயம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டயத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து நவ.26, டிச.3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகளில்) இரவு 11.30 மணிக்கு வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06027) புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கோட்டயத்தை அடையும்.

கோட்டயத்தில் இருந்து நவ.27, டிச.4, 11, 18, 25, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமைகளில்) இரவு 7 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06028) புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும். இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக கோட்டயம் சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது. இத்தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in