Published : 20 Nov 2023 05:51 AM
Last Updated : 20 Nov 2023 05:51 AM

ஆற்று மணல் அள்ளிய விவகாரம்: 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்

சென்னை: ஆற்று மணல் அள்ளிய விவகாரத்தில் 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

தமிழகத்தில் ஆற்று மணல் அள்ளுதல் மற்றும் விற்பனை செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணல் குவாரிகள் மற்றும் உரிமையாளர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மணல் குவாரிகள் குறித்து, ஒப்பந்ததாரர்களை வரவழைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து விவரங்களை திரட்டினர்.

இதனடிப்படையில், நீர்வளத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினர். பெரும்பாலான இடங்களில் மணல் அள்ளுவதை உயர்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் உரிய முறையில் கண்காணிக்கவில்லை என தெரியவந்தது.

இதையடுத்து 10 ஐஏஎஸ்அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமலாக்கத்துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் வரும் நாட்களில் அதிகாரிகள் முன்புஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x