“தகவல் தொழில்நுட்ப பிரிவால் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்” - ராஜன் செல்லப்பா நம்பிக்கை

திருப்பரங்குன்றத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நடைபெற்ற பூத் கமிட்டி உறுப்பினர்கள் பயிற்சி பட்டறையில் பேசும்  புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
திருப்பரங்குன்றத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நடைபெற்ற பூத் கமிட்டி உறுப்பினர்கள் பயிற்சி பட்டறையில் பேசும் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரை: தமிழகத்தில் வரும் தேர்தல்களில் தகவல் தொழில்நுட்ப பிரிவால் அதிமுக வெற்றி பெறும் என அக்கட்சி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேசினார்.

திருப்பரங்குன்றத்தில் அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் பயிற்சி பட்டறை மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமை வகித்து பேசியதாவது: அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு மூலம் வரும் தேர்தல்களில் வெற்றி பெறுவோம்.

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் வெறும் 2000 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோற்றது. அடுத்த தேர்தலில் 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். இதற்கு தகவல் தொழில் நுட்ப பிரிவின் பிரச்சாரம் தான் காரணம். தகவல் தொழில் நுட்ப அணியினர் சிறப்பாக பணி புரிந்தால் சிறப்பான எதிர்காலம் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன், தலைவர் சிங்கை ஜி.ராமச் சந்திரன், இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் பேசினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in