Published : 20 Nov 2023 04:14 AM
Last Updated : 20 Nov 2023 04:14 AM

ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்றவர்கள்.

வேலூர் / திருப்பத்தூர் / ராணிப்பேட்டை / திருவண்ணாமலை: ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணி யில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஆர்எஸ்எஸ் 99-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை கருப்லீஸ்வரர் கோயிலில் இருந்து கொடியேற்றத்துடன் பேரணி தொடங்கியது. அறங்காவலர் குழு தலைவர் பொன்னம்பலம் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்று புதிய பேருந்து நிலையம் அருகே பேரணி நிறைவடைந்தது. இதையடுத்து, அங்கு பொதுக்கூட்டம் நடை பெற்றது.

இக்கூட்டத்தில் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ், மாவட்ட செயலாளர் பிரபாகரன், நரிக்குறவர் சங்கத் தலைவர் ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் குடியாத்தம், அணைக்கட்டு, வேலூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான வர்கள் பங்கேற்றனர். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் ஆர்எஸ்எஸ் பேரணியில் தொண்டர்கள் சீருடை அணிந்து இசை வாத்தியங்களுடன் ரயில் நிலைய சாலையில் இருந்து பேரணியாக முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ரயில் நிலைய சாலையை அடைந்தனர். இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதைத்தைதொடர்ந்து திருப் பத்தூர் ரயில் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடந்தது.

திருப்பத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

கூட்டத்துக்கு ஆர்எஸ்எஸ் மாவட்ட தலைவர் சூரியமூர்த்தி தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் ஐயப்பன், கோட்ட உடற் பயிற்சி பொறுப்பாளர் சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். மாநில சுற்றுச் சூழல் துறை செயலாளர் ஜவகர் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். முடிவில், மாவட்ட இணை செயலாளர் முரளி நன்றி கூறினார்.

இதில் பாஜக மாநில செயலாளர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் வாசுதேவன், துணை தலைவர்கள் அன்பழகன், ஈஸ்வரன், நகர தலைவர் சண்முகம், இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் செல்வம் மற்றும் இந்து அமைப்பாளர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர். திருப்பத்தூர் எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில், கூடுதல் எஸ்பிக்கள் முத்துமாணிக்கம், புஷ்பராஜ் தலைமையில் 6 டிஎஸ்பிக் கள் உட்பட 600 காவலர்கள் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை முத்துக் கடையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்ற அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அணிவகுப்பு ஊர்வலத்தை திரு அண்ணாமலையார் அறக் கட்டளை தலைவர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் முடிவடைந்தது.

பின்னர், அங்கு பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தை விமல் நந்தகுமார் கொடியேற்றி தொடங்கி வைத்தார். கூட்டத்துக்கு ராமானுஜர் ஆன்மிக அறக்கட்டளை தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தொண்டை மண்டல இயற்கை விவசாய கூட்டமைப்பு தலைவர் கே.எம்.பாலு முன்னிலை வகித்தார். ஆர்எஸ்எஸ் வடதமிழ் நாடு மாநில அறிவுசார் துறை செயலாளர் நீலகண்டன் பங்கேற்று பேசினார்.

இதில், ஆர்எஸ்எஸ் மாவட்ட தலைவர் நாகராஜன், நகர தலைவர் கிருஷ்ணமூர்த்தி உட்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி தலைமையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் காளியம்மன் கோவில் வீரப்பன் தெருவில் இருந்து ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி புறப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவு பெற்றது. பின்னர் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநில இணைப் பொருளாளர் என்.பாஸ்கரன் சிறப்புரையாற்றினார். பேரணியை யொட்டி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x