Published : 02 Jan 2018 08:16 AM
Last Updated : 02 Jan 2018 08:16 AM

தாம்பரம் ரயில் நிலையத்தில் மூடப்பட்ட மலிவு விலை உணவகங்கள்

தாம்பரம் ரயில் நிலையத்தில் மலிவு விலை உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக வாசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக `தி இந்து’வின் உங்கள் குரல் தொலைபேசி சேவையைத் தொடர்புகொண்டு வாசகர் கே.வெங்கட்ரமணி கூறியிருப்பதாவது:

``தாம்பரம் ரயில் நிலையத்தில் வெளியூர் ரயில்கள் வந்து செல் லும் 7 மற்றும் 8-வது நடைமேடைகளிலும், உள்ளூர் ரயில்கள் வந்து செல்லும் 1 மற்றும் 2-வது நடைமேடைகளிலும் செயல்பட்டு வந்த மலிவு விலை சிற்றுண்டி உணவகங்கள் திடீரென மூடப்பட்டுள்ளன. இதனால், ரயில் பயணி கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ரயில் நிலையத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் செயல்படும் தனியார் உணவகங்களில் அதிக விலை கொடுத்து உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பயணிகள் நலனைக் கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் கவனம் செலுத்தி, மலிவு விலை உணவகங்களை மீண்டும் திறக்க வேண்டும்” என்றார்.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘தாம்பரம் ரயில் நிலையத்தில் புதியதாக உணவகங்கள் திறக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, தாம்பரத்தில் 3-வது முனையம் திறக்கும்போது, போதிய அளவில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x