'போன்பே' செயலி மூலம் மெட்ரோ பயணச்சீட்டு பெறலாம்

'போன்பே' செயலி மூலம் மெட்ரோ பயணச்சீட்டு பெறலாம்
Updated on
1 min read

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பயணிகள் எளிய வகையில் பயணச் சீட்டுகளை `போன்பே'(PhonePe) செயலி மூலம் பெறுவதற்கான புதியவசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், இதை அறிமுகப்படுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘போன்பே நிறுவனத்துடன் இணைந்து இந்த வசதி செயல்படுத்தப்படுகிறது. இது பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்த்து அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகிறது.

மேலும்,இந்த சேவைக்கு தற்போதுள்ள 20 சதவீத கட்டண தள்ளுபடியும் வழங்கப்படுகிறது’’ என்றார். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர்கள் ராஜேஷ் சதுர்வேதி (இயக்கம் மற்றும் அமைப்புகள்), தி.அர்ச்சுனன் (திட்டங்கள்), பிரசன்ன குமார் ஆச்சார்யா (நிதி), கூடுதல்பொது மேலாளர் சிவகுமார் ரவீந்திரன் ஆலோசகர் கே.ஏ.மனோகரன், போன்பே நிறுவனத்தின் வணிகப் பிரிவு தலைவர் ராகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in