

கேரளாவில் நூற்றுக்கணக்கான தமிழ் ஆசிரி யர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு அகில இந்திய தேசிய லீக் கண்டனம் தெரிவித்துள்ளது. முல்லை பெரியாறு விவகாரம் காரணமாக தமிழர்களை கேரள அரசு பழிவாங்குகிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் எஸ்.ஜே.இனாயத்துல்லா சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேரள மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் அவர்களது கோரிக்கையை ஏற்று தமிழ் ஆசிரியர்களை கேரள அரசு நியமித்தது. தற்போது அவர்கள் அனைவரும் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கேரள அரசின் இந்த நடவடிக்கையால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மட்டுமின்றி, அங்கு வாழும் மக்களும் அதிர்ச்சி அடைந் துள்ளனர்.
திடீரென்று ஆசிரியர்களை வேலையில் இருந்து நீக்கினால் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப் படும். ஆசிரியர் களின் வாழ்வாதார மும் கேள்விக்குறி யாகியுள்ளது. கேரள அரசின் இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
முல்லை பெரியாறு விவகா ரத்தை தொடர்ந்து, தமிழகத்தையும் தமிழர்களையும் பழிவாங்கும் நடவடிக்கையில் கேரள அரசு ஈடுபட்டுள்ளதோ என சந்தேகிக்கத் தோன்றுகிறது. இவ்வாறு இனாயத்துல்லா கூறியுள்ளார்.