அண்டை மாநில அரசுப் போக்குவரத்துக் கழக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு: திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

அண்டை மாநில அரசுப் போக்குவரத்துக் கழக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு: திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு
Updated on
2 min read

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகத்தை சீரமைப்பது குறித்து அண்டை மாநிலங்களில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை பற்றி ஆய்வு செய்து அறிக்கை தருவதற்காக திமுக, குழு ஒன்றை அமைத்துள்ளது.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை:

ரூ.3,600 கோடி அளவுக்கு திடீ ரென இரவோடு இரவாக பேருந் துக் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தி மக்களைப் பேரிடருக்கு அதிமுக அரசு ஆளாக்கியுள்ளது. மகளிர், மாணவர்கள் மற்றும் மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்துக்குக்கூட மதிப்பளிக்க மறுத்து வருகிறது. பேருந் துக் கட்டண உயர்வைக் கண்டித்து மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பிரச்சினைகளை முழுமையாக ஆராய்ந்து, பேருந்து கட்டணத்தை மனம்போன போக்கில் ஏற்றாமலும், தொழிலாளர்களின் உரிமைகளை மதித்துப் போற்றிடும் வகையிலும் அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தை சீரமைத்துச் செம்மைப் படுத்துவது குறித்து ஆலோசனை கள் வழங்க ஒரு குழுவை அமைத்து அறிக்கை வழங்குமாறு தலைமைக் கழகத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, உயர்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் க.பொன் முடி எம்எல்ஏ, போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் கே.என். நேரு எம்எல்ஏ, தொமுச பேரவைப் பொதுச் செயலாளர் மு.சண்முகம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். குழுவின் தலைவராக முன்னாள் மத்திய அமைச் சர் டி.ஆர்.பாலு இருப்பார்.

வல்லுநர்களிடம் ஆலோசனை

இக்குழு, அண்டை மாநிலங்களில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள், பேருந்துக் கட்டணங்கள், தொழிலாளர் உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து போக்குவரத்துத் துறை யில் அனுபவம் பெற்ற வல்லுநர்கள், பொருளாதார நிபுணர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தி தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகத்தை சீரமைப்பது குறித்து தனது பரிந்துரைகளை ஓர் அறிக்கையாக தயார் செய்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் விரைவில் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு தலைமைக் கழக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இக்குழுவில் இடம்பெற்றுள்ள தொமுச பேரவைப் பொதுச் செயலாளர் மு.சண்முகம் கூறியது: குறைந்த கட்டணத்தில் நிறைவான போக்குவரத்து சேவை வழங்க வேண்டும் என்பதற்காக தனியார் துறையாக இருந்த போக்குவரத்துத் துறையை பொதுத்துறையாக திமுக தலைவர் கருணாநிதி மாற்றினார். தந்தை வழியில் மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலும், எதிர்கட்சித் தலைவர் என்கிற முறையிலும் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இக்குழுவை ஸ்டாலின் அமைத்துள்ளார். திமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சீரமைக்கப்பட்டது. அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துக் கழகம் கீழ்நோக்கிப் போகிறது. மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ள கட்டண உயர்வு தேவையற்றது என்பதை எடுத்துரைக்கவே இக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in