Published : 16 Nov 2023 06:19 AM
Last Updated : 16 Nov 2023 06:19 AM

அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் | நவ.21, 22-ல் எஸ்ஆர்எம்யூ ரகசிய வாக்கெடுப்பு: பொதுச்செயலாளர் கண்ணையா அறிவிப்பு

சென்னை: அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் நடத்துவது தொடர்பாக நவ.21, 22 ஆகிய தேதிகளில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என தென்னக ரயில்வேமஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யூ) பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்தார். தென்னக ரயில்வே மஸ்தூர்யூனியன் சார்பில், பொது மகாசபைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளராக என்.கண்ணையாமீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவராக சி.ஏ.ராஜா ஸ்ரீதர்ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதுதவிர, கோட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்துக்கு பிறகு,எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் என்.கண்ணையா கூறியதாவது:

ரயில்களில் பாமர மக்கள்பயணிக்கும் பொது பெட்டிகளை ஏசி பெட்டிகளாக மாற்றதிட்டமிட்டுள்ளனர். இதனால் பாமர, ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதை எதிர்க்கிறோம். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டம்கடந்த 2004-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம்தேசிய பென்சன் திட்டம் என்றுபெயர் மாற்றம் செய்யப்பட்டாலும் பயனற்றதாக உள்ளது. புதிய பென்சன் திட்டத்தை மாற்றி, முன்பு இருந்ததுபோல, ஓய்வு பெறும்போது கடைசி மாதசம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் என்று மாற்ற வேண்டும். தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள அரசு, தாங்கள் பதவிக்கு வந்தால், ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை தருவோம் என்று உறுதி கூறினர்.

ஆனால், இன்றோ ஆட்குறைப்பு, தனியார்மயமாக்கம் ஆகியவற்றின் மூலமாக தற்போது இருக்கும் பணியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. தற்போது, ரயில்வேயில் காலியாக உள்ள 90,000 இடங்களுக்கு 2.80 கோடி பேர் விண்ணப்பிக்கின்றனர். வேலை இல்லாத நிலை எந்த அளவுக்குஉள்ளதை இதன்மூலம் புரிந்துகொள்ள வேண்டும். ஐ.சி.எஃப்-ல்ஒரு வந்தே பாரத் ரயில் தயாரிக்க ரூ.98 கோடி செலவிடப்பட்டது. தற்போது, ரஷ்யா கம்பெனிக்கும், மற்ற கம்பெனிகளுக்கு ரூ.139 கோடியில் ஒரு வந்தே பாரத் ரயில்தயாரிக்க கொடுக்க உள்ளார்கள்.

இதனால், வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை உள்ளது. மக்களுக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும். பொது பெட்டிகளை ஏசி பெட்டியாக மாற்றக்கூடாது. நல்லநிலையில் இயங்கும் கம்பெனிகளை வெளிநபர்களுக்கு கொடுக்கக் கூடாது. இவற்றை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்வது தொடர்பாக அகில இந்திய அளவில் நவ.20, 21-ல்மத்திய அரசு ஊழியர்கள், ரயில்வே ஊழியர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உள்ளோம். இதன்பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x