Published : 16 Nov 2023 06:20 AM
Last Updated : 16 Nov 2023 06:20 AM
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக காவல் துறை முடுக்கிவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு (எஸ்.பி) டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 986 பேர் கொண்ட 18 குழுக்கள்,170 வகையான பேரிடர் மீட்பு உபகரணங்களுடன் தயாராக உள்ளன.அவற்றில் 6 குழுக்கள் ஆவடியில்உள்ளன. இவை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டுமற்றும் கடலூர் மாவட்டங்களில்பேரிடர் மீட்புப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 12 குழுக்கள், மற்றகடலோர மாவட்டங்கள் உள்ளிட்டபகுதிகளில் பேரிடர்கள் ஏற்பட்டால்எதிர்கொள்வதற்காக முன்னெச்சரிக்கையாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. இந்த அணிகள் வானிலை அறிக்கை மற்றும் மாவட்ட/மாநகர பேரிடர் சிறப்புக்கட்டுப்பாட்டு அறைகளிலிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு பேரிடர் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும். வடகிழக்குப் பருவ மழைக்காகடிஜிபி அலுவலகத்தில் உள்ள, கூடுதல் டிஜிபி செயலாக்கம் அலுவலகத்தில் சிறப்புக் கட்டுப்பாட்டு அறை24x7 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
அனைத்து மாநகரம்/மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு சிறப்புக் கட்டுப்பாட்டு அறைகள் (112, 1070, 94458 69843, 94458 69848) 24 மணி நேரமும் செயல்படும். இந்த கட்டுப்பாட்டு அறைகள் அனைத்துதுறைகளுடன் குறிப்பாக தங்களின் எல்லைகளுக்கு உட்பட்ட காவல் நிலையங்களுடன் தொடர்பில் இருக்கும். வானிலை ஆய்வு மைய முன்னறிவிப்புகளை கவனித்து அதற்கு ஏற்றவாறு விரைந்து செயல்படும் என்று டிஜிபி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT