வைகை அணையில் இருந்து திருமங்கலம் ஒரு போக பாசனத்துக்கு நீர் திறப்பு

வைகை அணையில் இருந்து திருமங்கலம் ஒரு போக பாசனத்துக்கு நீர் திறப்பு
Updated on
1 min read

ஆண்டிபட்டி: திருமங்கலம் பகுதியின் ஒருபோக பாசனத்துக்காக நேற்று வைகை அணையில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், ஆற்றுப் பகுதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து ஜூனில் முதல் போகத்துக்கும், செப்டம்பரில் இரண்டாம் போகத்துக்கும் தண்ணீர் திறப்பது வழக்கம். தென் மேற்குப் பருவ மழை பொய்த்ததால் முதல் போகத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை. வட கிழக்குப் பருவ மழையால் கடந்த வாரம் 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 70.5 அடியை எட்டியது.

இதைத் தொடர்ந்து, கடந்த 10-ம் தேதி திண்டுக்கல், மதுரை மாவட்ட பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனத்துக்காக விநாடிக்கு 900 கன அடி வீதம் திறக்கப்பட்டது. இருப்பினும், நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் முழுக் கொள்ளளவிலேயே இருந்தது. இந்நிலையில், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசனத்துக்கும் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து நேற்று விநாடிக்கு 930 கன அடிநீர் திறக்கப்பட்டது. 10 நாட்களுக்கு இதே அளவு நீர் பாசனத்துக்காக வெளியேற்றப்பட உள்ளது. தற்போது குடிநீர் மற்றும் பாசனத்துக்காக கால்வாய் வழியே மொத்தம் 1,899 கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது. வைகை அணை நீர்மட்டம் 70.28 அடியாகவும், நீர்வரத்து 597 கன அடியாகவும் உள்ளது. முல்லைப் பெரியாறு அணையைப் பொருத்தளவில் நீர்மட்டம் 131.40 அடியாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in