போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர்-நடத்துநர் பணிக்கான தேர்வு: இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு

போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர்-நடத்துநர் பணிக்கான தேர்வு: இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு
Updated on
1 min read

சென்னை: விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர்-நடத்துநர் பணிக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், இணையவழியில் நுழைவு அனுமதிச்சீட்டை (ஹால்டிக்கெட்) பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாகமேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் நேரடி நியமனம் மூலமாக தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் ஓட்டுநர்-நடத்துநர் பதவிக்குஇணையவழியில் விண்ணப்பித்தவர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பரிந்துரைக்கப்பட்டு விண்ணப்பம் சமர்ப்பித்தவர்களுக்கும் நவ.19-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும்.

இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தேர்வுக்கான நுழைவு அனுமதிச்சீட்டை (ஹால்டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவ்வாறுபதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள் 04447749002 என்ற தொழில்நுட்பஉதவி மைய எண்ணை தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம்.

வேலைவாய்ப்பு அலுவலகம்மூலம் பரிந்துரை செய்யப்பட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு பதிவுத் தபால் மூலமாக தேர்வுக்கான நுழைவு அனுமதி சீட்டு அனுப்பப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in