தொலைதூரக்கல்வி கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

தொலைதூரக்கல்வி கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு
Updated on
1 min read

தொலைதூரக்கல்வி டியூஷன் கட்டணத்தை தேர்வர்கள் ஆன்லைனில் செலுத்தலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவன இயக்குநர் (பொறுப்பு) பேராசிரியர் எஸ்.கருணாநிதி, இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி திட்டத்தில் சேர்ந்துள்ள மாணவர்கள் (A15, C16, A16, C17, A17 அணியினர் மற்றும் அதைத்தொடர்ந்த அணியினர்) தங்களின் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு டியூஷன் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். இதுகுறித்து கூடுதல் விவரங்களை www.ideunom.ac.in, www.unom.ac.in என்ற இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம்'' என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in