ஒக்கி புயல் நிவாரணப் பணிகளிலும் அலட்சியம் காட்டுவதா?- அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

ஒக்கி புயல் நிவாரணப் பணிகளிலும் அலட்சியம் காட்டுவதா?- அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்
Updated on
1 min read

ஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியை நிறுத்திவிட்ட தமிழக அரசு நிவாரணப் பணிகளிலும் அலட்சியம் காட்டுகிறது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

கடலூரில் மணவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவந்த ஸ்டாலின், பின்னர் ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டார். புயலின்போது கடலில் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம், "ஒக்கி புயல் மீட்புப் பணியில் இந்த அரசு முழுமையாக தோல்வியடைந்து இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை எத்தனை மீனவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தைக் கூட 'குதிரை பேர' அரசு கண்டுபிடித்து வெளியிட முடியாத சூழ்நிலைதான் தொடர்கிறது.

அதுபோலவே, ஒக்கி புயல் தாக்குதல் காரணமாக கடலூரில் காணாமல் போன 23 மீனவர்களில், 19 பேரின் நிலை என்ன என்பதே தெரியாத சூழ்நிலை இருக்கிறது. அவர்களை இழந்துத் தவித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தினரை இதுவரை அமைச்சரோ அல்லது அதிகாரிகளோ வந்து சந்தித்து, ஆறுதல் சொல்லக்கூட அவர்களுக்கு மனமில்லை.

எனவே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மீனவர்களை இழந்து வாடிக் கொண்டிருக்கும் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம். காணாமல் போன மீனவர்களை இந்த அரசு உடனடியாக கண்டுபிடித்து, அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் இந்த அரசை நான் வற்புறுத்தி, வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

அரசு அலட்சியம்:

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், தேடுதல் பணி முடிந்து விட்டது, எங்களுடைய பணி முடிந்து விட்டது என பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாகவே பேட்டி கொடுத்தார். ஆனால், 'குதிரை பேர' அரசு, காணாமல் போன கடைசி மீனவர் கிடைக்கும் வரை தேடுதல் பணியைத் தொடர்வோம் என்று ஆளுநர் உரையில் கூட குறிப்பிட்டுள்ளார்கள். எனவே, அதையெல்லாம் சுட்டிக்காட்டி, இதில் எது உண்மை என்று சட்டமன்றத்திலும் நான் கேள்வி எழுப்பினேன். கடைசிவரை தேடுவோம் என்று தவறான தகவலை பதிவு செய்தார்களே தவிர, உரிய பதில் எதையும் தரவில்லை. எனவே, மீனவர்கள் காணாமல் போனதில் இந்த அரசு அலட்சியம் காட்டி வருகிறது"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in