8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 10-ம் வகுப்பு மாணவர் சிக்கினார் - கிருஷ்ணகிரியில் தொடர் சம்பவங்களால் பெற்றோர் அதிர்ச்சி
கிருஷ்ணகிரி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பினர்.
கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு கிராமத் தைச் சேர்ந்த 8 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் வீட்டின் அருகே சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன், சிறுமியை ஏமாற்றி அருகில் இருந்த மாந்தோப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குச் சென்றதும் சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார்.
அப்போது, அங்கு விளை யாடிக் கொண்டிருந்த மற்றொரு சிறுமி இதைப்பார்த்து அதிர்ச்சி யடைந்து இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே சிறுமியின் பெற்றோர் பதறியடித்தபடி சம்பவ பகுதிக்குச் சென்றுள்ளனர். அதற்குள் சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சிறுமியை மீட்ட பெற்றோர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸார், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த சிறுவனை கைது செய்தனர். பின்னர், சேலம் மாவட்டம் சங்க கிரியில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு ராயக்கோட்டை அருகே கல்லூரி மாணவி ஒருவரை 4 பேர் பலாத் காரம் செய்தனர். இந்நிலையில் சிறுமிக்கு இப்படியொரு நிலை ஏற் பட்டிருப்பது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் மேலும் ஒருவர் கைது
ராயக்கோட்டை அருகே கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட் டது தொடர்பான வழக்கில் தலை மறைவாக இருந்த மேலும் ஒரு வரை போலீஸார் கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த அந்த கல்லூரி மாணவி, தனது காதலருடன் போடம்பட்டி பகுதியில் உள்ள மாந்தோப்பில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது 4 பேரால் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டார். கல்லூரி மாணவியின் காதலரை கட்டிப் போட்டுவிட்டு இத்தகைய செய லில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த தருமபுரி மாவட்டம் ஜிட்டாண்டஅள்ளி அடுத்த நாயக் கனூர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (24) என்பவரை சனிக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.
தலைமறைவானவரை சிக்க வைத்த ஆலமரம்
தலைமறைவாக இருந்த பிரகாஷ் சிக்கியதில் ஒரு சுவாரஸ்ய பின்னணி உள்ளது. சனிக்கிழமை இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம்-ராயக்கோட்டை சாலையில் ஜக்கேரி ஏரிக்கரை மீது ராமச்சந்திரன்(42) என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த நபர், ராமச்சந்திரனிடம் இருந்த பணத்தை மிரட்டி பறித்துக் கொண்டு வேகமாக சென்றுள்ளார். பதற்றத்துடன் பைக் ஓட்டிய அந்த நபர் ஏரிக்கரையில் இருந்த ஆலமரத்தின் மீது வேகமாக மோதியுள்ளார். இதில் அந்த நபரின் கால் முறிந்துள்ளது. உடனே ராமச்சந்திரனும் அருகில் இருந்தவர்களும் அவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். போலீஸாரின் விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்ட அந்த நபர் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவான பிரகாஷ் என்பது தெரியவந்தது.
