Published : 14 Nov 2023 06:20 AM
Last Updated : 14 Nov 2023 06:20 AM
சென்னை: ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பெற ஆண்டு தோறும் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், நேரில் சென்று வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும்விதமாக, ஜீவன் பிரமான் திட்டத்தின்மூலம், அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ்வங்கி, ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே, கைவிரல் ரேகையை பயன்படுத்தி டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 மட்டும் தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி அஞ்சல்காரரிடம் ஆதார் எண், மொபைல்எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகையை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் வாழ்நாள்சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். மத்திய, மாநில அரசின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் இதர தகுதி வாய்ந்த ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரர்கள் மூலம் அஞ்சல் துறையால் வழங்கப்படும் சேவைகளைப் பயன்படுத்தி தங்கள் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT