ஸ்டான்லி மருத்துவமனையில் பஜ்ஜி, போண்டாவை சாப்பிடும் எலி: வீடியோ வைரலானதால் உணவகத்தை மூட டீன் உத்தரவு

ஸ்டான்லி மருத்துவமனையில் பஜ்ஜி, போண்டாவை சாப்பிடும் எலி: வீடியோ வைரலானதால் உணவகத்தை மூட டீன் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த பஜ்ஜி, போண்டாவை எலி சாப்பிடும் வீடியோ வைரலானதை தொடர்ந்து, உணவகத்தை மூடுவதற்கு மருத்துவமனை டீன் உத்தரவிட்டுள்ளார். சென்னை அரசு ஸ்டான்லிமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் தனியார் மூலம் நடத்தப்படும் உணவகத்தில் சுகாதாரமற்ற நிலையில் உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், உணவகத்தில் கண்ணாடி கூண்டுக்குள் வைக்கப்பட்டிருந்த பஜ்ஜி, போண்டா,வடையை எலி சாப்பிடுவதை பார்த்த பொதுமக்கள் உணவகத்தில் இருந்தவர்களிடம் கேள்வி கேட்டனர். இருதரப்பும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால், பஜ்ஜி, போண்டா, வடைகளை ஒரு பையில் போட்டு எடுத்து சென்றனர். இவை அனைத்தையும் செல்போனில் வீடியோ எடுத்த சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட மருத்துவமனை டீன் பாலாஜி உடனடியாக உணவகத்தை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in