தமிழகம்‌ முழுவதும்‌ நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 2,206 வழக்குகள் பதிவு @ தீபாவளி

படம்: ஜோதி ராமலிங்கம்
படம்: ஜோதி ராமலிங்கம்
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் நவ.12 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நவ.13 (திங்கட்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் நேராக கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 2,206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் / படைத்தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நவ.12 மற்றும் நவ.13 ஆகிய இரண்டு நாட்களில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு வெடிப்பதற்காக குறிப்பிடப்பட்ட நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலான நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்த காரணத்திற்காக மாநிலம் முழுவதும் 2,246 பேர் மீது 2,206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில் 2,095 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 558 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 2005 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in