

1980-களில் பிரபல பானமாக பட்டி, தொட்டி முதல் சிறு, பெரு நகரம் வரை கோலோச்சியிருந்தது 'கோலி சோடா'. ஏறத்தாழ 50 ஆண்டுகள் நம் வாழ்வோடு ஒன்றிப் போயிருந்த கோலி சோடா கொஞ்சம் கொஞ்சமாக காலியாகி வருகிறது. இருப்பினும் கோலி சோடாவை இன்றும் உற்சாகமாக உற்பத்தி செய்கிறார் திருச்சி சேகர்.
“மின்சாரம் இன்றி கையால் சுற்றும் கோலி சோடா தயாரிப்பு தொழிலை வீட்டில் அம்மாதொடங்கினார். புதுக்கோட்டையில் பெரிதாக வரவேற்பு இல்லை. திருச்சி வந்து தொழிலை ஆரம்பித்தோம். ஒரு நாளைக்கு 300 பாட்டில் சுற்றலாம். விலை 10 ரூபாய். எழும்பிச்சை பழம், ஐஸ் சேர்த்து என்றால் 15 ரூபாய்.
வேலூரில் இருந்த கோலி சோடா பாட்டில் தயாரிப்பு நிறுவனம் மூடப்பட்டதால் வட மாநிலங்களில் இருந்து ரூ.100-க்கு பாட்டில் வாங்குகிறோம். இதில் பாட்டில் உடையாமல் பார்த்து கொள்வதே முக்கியம்” என்கிறார்.
.