Published : 12 Nov 2023 06:12 AM
Last Updated : 12 Nov 2023 06:12 AM
சென்னை: குற்ற வழக்கை மறைத்ததாக பணிநீக்கம் செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலருக்கு இரு வாரங்களில் பணிவழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் அரவிந்த்ராஜ். கடந்த 2013-ம் ஆண்டு நடந்த இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வில் வெற்றி பெற்றார். 2013 பிப்.17 அன்று பயிற்சிக்கு சென்றார். இந்நிலையில் கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் நின்ற போலீஸ் ஜீப்புக்கு தீ வைத்த குற்ற வழக்கில் இவருடைய பெயரும் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அதை மறைத்து போலீஸ் வேலையில் சேர்ந்ததாகக் கூறி அவரை பணிநீக்கம் செய்து ராஜபாளையம் 11-வதுபட்டாலியன் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதர்த்து அரவிந்த்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், போலீஸ் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில் முன்விரோதம் காரணமாக குடியிருப்பில் வசிக்கும் சிலர் நடக்காத சம்பவம்தொடர்பான வழக்கில் என்னுடைய பெயரையும் சேர்த்து விட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி என்னை நீதிமன்றம்விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. எனவே எனது பணிநீக்கத்தை ரத்து செய்துபணி வழங்க உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், தமிழ்நாடு காவலர் பணி விதிகளின்படி பயிற்சியில் இருக்கும் ஒருவரை பணிநீக்கம் செய்யும் முன்பாக அவரிடம் உரிய விளக்கம் கேட்டுநோட்டீஸ் பிறப்பித்து, விளக்கம் பெற்றுஇறுதி முடிவு எடுக்கவேண்டும். ஆனால்மனுதாரர் விவகாரத்தில் அதுபோல நோட்டீஸ் பிறப்பித்து விளக்கம் கேட்காததுஇயற்கை நீதிக்கு எதிரானது. எனவே மனுதாரரை பணிநீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்கிறேன். அவருக்கு இரு வாரங்களில் மீண்டும்பணி வழங்கி பயிற்சியில் அனுமதிக்கவேண்டும் என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT