Published : 11 Nov 2023 06:06 AM
Last Updated : 11 Nov 2023 06:06 AM
சென்னை: சாலை வாகனங்களுக்கான வரி உயர்வைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர், செயலர் மற்றும் ஆணையருக்கு தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) தலைவர் கே.ஆறுமுகநயினார், பொதுச் செயலாளர் வி.குப்புசாமி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது: சாலையில் இயங்கக்கூடிய இருசக்கர வாகனம்முதல் 20 சக்கர வாகனங்கள்வரையிலான பல்வேறு வகைவாகனங்களுக்கும், கட்டுமானதளவாட வாகனங்களுக்கும்மோட்டார் வாகனப் பதிவு வரி,சாலை வரி, பசுமை வரி, சாலைபாதுகாப்பு வரி போன்றவற்றை40 சதவீதத்துக்கு மேலாக உயர்த்தி தமிழக அரசு கடந்த7-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
ஏற்கெனவே 2014-ம் ஆண்டுமுதல் புதிய மோட்டார் வாகனசட்டங்களை மத்திய அரசுஒன்றன்பின் ஒன்றாக அமல்படுத்தி, அதற்கேற்ப எரி பொருள்விலை, உதிரிப்பாக விலை, இன்சூரன்ஸ், சுங்கவரி என அனைத்தையும் உயர்த்தியது. இந்நிலையில் தமிழக அரசும் தன் பங்குக்கு வாகன வரிகளை நியாயமின்றி உயர்த்தியுள்ளது. மக்களிடம் தமிழகஅரசுக்கு உள்ள ஆதரவான சூழலை இந்த வரி உயர்வு எதிராகத் திருப்பிவிடும். எனவே, தமிழக அரசு வாகன வரி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.இதை மேலும் தாமதப்படுத்தினால் ஒட்டுமொத்த போக்குவரத்துத் துறையினரும் சாலைக்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT