சித்தா, ஆயுர்வேதம் படித்தவர்கள் அலோபதி சிகிச்சை அளிக்கலாம் என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவு

சித்தா, ஆயுர்வேதம் படித்தவர்கள் அலோபதி சிகிச்சை அளிக்கலாம் என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவு
Updated on
1 min read

சென்னை: சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோ பதி மற்றும் யுனானி போன்ற இந்திய மருத்துவம் படித்தவர்கள், அலோபதி சிகிச்சை வழங்கலாம் என அனுமதி அளித்து தமிழக அரசு கடந்த 2010-ம் ஆண்டு செப்.8-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கடந்த 2021 நவ.14-ல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த தீ்ர்ப்பை எதிர்த்து இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்த் டேவிட், ‘‘அரசாணை தொடர்பாக எந்த கருத்துகளையும் தெரிவிக்காமல் தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். அதுவும் மற்ற வழக்குகளுடன் சேர்த்து இந்த வழக்கையும் விசாரித்து மொத்தமாக தள்ளுபடி செய்துள்ளார். எனவே, தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார். அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்கிறோம். அத்துடன் இந்த வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரிக்க வேண்டும் என உத்தரவி்ட் டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in