Published : 11 Nov 2023 06:20 AM
Last Updated : 11 Nov 2023 06:20 AM
சென்னை: புறநகர் மின்சார ரயில்களில் உரிய டிக்கெட் இன்றி பயணம் செய்யும் பயணிகளை கண்டுபிடிப்பதற்காக நேற்று முன்தினம் சிறப்பு சோதனை நடைபெற்றது. இதில் 535 டிக்கெட் பரிசோதகர்கள் ஈடுபட்டனர். அப்போது, முறையான டிக்கெட் இன்றி பயணம் செய்தது தொடர்பாக 2,558 வழக்குகளும், கட்டணம் செலுத்தாமல் சரக்குகளை கொண்டு சென்றது தொடர்பாக 19 வழக்குகளும், ரயிலில் புகைப்பிடித்தல், குப்பை போடுதல் உள்ளிட்டவை தொடர்பாக 414 வழக்குகளும் போடப்பட்டுள்ளன. மேலும், பிடிபட்டவர்களிடம் இருந்துரூ.27.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு அக்.12-ம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக ரூ.20.19 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. அதன்பிறகு ஒரே நாளில் இவ்வளவு அதிக தொகை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT