Published : 11 Nov 2023 06:15 AM
Last Updated : 11 Nov 2023 06:15 AM
தென்காசி/ திருநெல்வேலி/ தூத்துக்குடி: திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலுள்ள மாஞ்சோலையில் நேற்று காலை 8 மணிவரையிலான 24 மணிநேரத்தில் அதிகபட்ச மாக 20 மி.மீ. மழை பதிவாகி யிருந்தது. மாவட்டத் திலுள்ள அணைப் பகுதிகளிலும் பிறஇடங்களிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): காக்காச்சி- 5, நாலுமுக்கு, ஊத்து, மணிமுத்தாறு, அம்பா சமுத்திரம்- தலா 1, பாபநாசம்- 4, நம்பியாறு- 6, கொடுமுடியாறு- 5, சேரன்மகாதேவி- 14.8, ராதாபுரம்- 3.4, நாங்குநேரி- 3.6, களக்காடு- 3.2, மூலைக்கரைப்பட்டி- 15, பாளையங்கோட்டை- 10, திருநெல்வேலி- 2.6.
பாபநாசம் அணை நீர்மட்டம் 92 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 625 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 104 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 63.23 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 455 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாகுபடி பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் மாவட்டத் தில் அதிக பட்சமாக சங்கரன்கோவிலில் 25 மி.மீ. மழை பதிவானது. ராமநதி அணையில் 14.20 மி.மி., சிவகிரியில் 14 மி.மீ., கருப்பாநதி அணையில் 12 மி.மீ., கடனாநதி அணையில் 8 மி.மீ., அடவிநயினார் அணையில் 4 மி.மீ., குண்டாறு அணை, செங்கோட்டையில் தலா 2 மி.மீ., ஆய்க்குடி, தென்காசியில் தலா 1 மி.மி. மழை பதிவானது. தொடர் மழையால் அணை களில் நீர்மட்டம் சிறிதளவு உயர்ந்துள்ளது. குற்றாலம் அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி யது. சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. விவாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவும் பரவலாக நல்ல மழை பெய்தது. தூத்துக்குடி மாநகரின் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): எட்டயபுரம் 41, ஸ்ரீவைகுண்டம் 35, சூரன்குடி 19, சாத்தான்குளம் 18, கோவில்பட்டி 17, காயல் பட்டினம் 13, ஓட்டப்பிடாரம் மற்றும் தூத்துக்குடியில் தலா 12, திருச்செந்தூர் மற்றும் கயத்தாறில் தலா 9, குலசேகரன்பட்டினம் 7, கீழ அரசடி 5, வைப்பார் 4, கழுகுமலை 3, காடல்குடி 2 மிமீ மழை பெய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT