Published : 10 Nov 2023 05:45 AM
Last Updated : 10 Nov 2023 05:45 AM
சென்னை: திருவான்மியூரில் கார் மோதி தூக்கி வீசப்பட்ட மாநகராட்சி ஒப்பந்த துப்புரவுப் பணியாளர் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். சென்னை கண்ணகி நகரைச்சேர்ந்தவர் சிவகாமி (45). சென்னை மாநகராட்சி (180-வது வார்டு) ஒப்பந்த துப்புரவுப்பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள திருவான்மியூர், ஆர்டிஓ அலுவலகம் அருகே பணி செய்து கொண்டிருந்தார்.
கார் மோதியது: அப்போது, திருவான்மியூர் முதல் பிரதான சாலையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலைஅருகே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சிவகாமி மீதுபயங்கரமாக மோதி தூக்கி வீசியது. இதில், சாலை நடுவே விழுந்தவர் மீது திருவான்மியூரிலிருந்து நீலாங்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஏறி இறங்கியது. இதனால் சிவகாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து அடையாறுபோக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீஸார் சம்பவ இடம்விரைந்து, சிவகாமி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த முகலிவாக்கத்தைச் சேர்ந்த அஸ்வந்த் (25) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்.
ரூ.5 லட்சம் நிவாரணம்: விபத்தில் உயிரிழந்த சிவகாமி குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த சிவகாமி, பணியில் இருந்தபோது அவர் மீதுவாகனம் மோதியதில் சம்பவஇடத்தில் இறந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந் தேன்.
ஆழ்ந்த இரங்கல்: அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு முதல்வரின்பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5லட்சம் வழங்க உத்தரவிட்டுள் ளேன்’’ என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT