Published : 09 Nov 2023 05:31 AM
Last Updated : 09 Nov 2023 05:31 AM

“ஒரு பைசா பறிமுதல் செய்திருந்தாலும் பொறுப்பேற்று பதில் சொல்ல தயார்” - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

திருவண்ணாமலை: வருமான வரி சோதனையை பார்த்து நாங்கள் அஞ்ச மாட்டோம். எனது வீடு, மனைவி வீடு, மகன்கள் வீட்டில் ஒரு பைசா பறிமுதல் செய்திருந்தாலும், அதற்குப் பொறுப்பேற்று பதில் சொல்லத் தயார் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு,கல்வி நிறுவனங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த5 நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்றது. திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் இரவுசோதனை நிறைவடைந்ததையடுத்து, மாவட்ட திமுக அலுவலகத்தில், தனது மகன்கள் குமரன், கம்பன்ஆகியோருடன் செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் எ.வ.வேலு. அப்போது அவர் கூறியதாவது:

வருமான வரித் துறை அதிகாரிகளை நான் குறை கூற மாட்டேன்.சோதனை நடத்துவது அவர்களதுகடமை. அவர்களை ஏவியவர்கள்எங்கோ உள்ளனர்.எனது நேர்முகஉதவியாளர் சுப்பிரமணி, கார் ஓட்டுநர் ஆகியோரை 4 நாட்களுக்கு தனிமைப்படுத்தி, அச்சுறுத்தி, விசாரணை நடத்தியுள்ளனர். எனதுகல்லூரி, வீடு என அனைத்துஇடங்களிலும் சோதனை நடத்தியதுடன், கல்லூரி அலுவலர்களையும் விசாரித்தனர். 2021-ல் திருவண்ணாமலையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றபோது சோதனை நடத்தி,எனது தேர்தல் பணியை 2 நாட்களுக்குத் தடுத்தனர்.

நான் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவன். திருவண்ணாமலைக்கு வந்து அச்சகம் நடத்தினேன். பின்னர், லாரி தொழில் செய்தேன். திரைப்பட விநியோகிஸ்தர்,தயாரிப்பாளராக இருந்துள்ளேன்.அப்போது சம்பாதித்த பணத்தைக்கொண்டு, எனது தாய் சரஸ்வதிஅம்மாள் பெயரில் அறக்கட்டளைதொடங்கினேன். தொடர்ந்து, பல கல்லூரிகளை தொடங்கினேன்.6 முறை எம்எல்ஏ. நானும், எனது மகன்களும், மனைவியும் வருமான வரி செலுத்தி வருகிறோம்.

என்னிடம் கோரிக்கைகளை கூற வந்த திமுகவினரிடமும் சோதனைநடத்துவது நியாயமா? அதிகாரிகள் திமுகவைச் சேர்ந்தவர்களிடம் மட்டுமே சோதனை மேற்கொள்கின்றனர். ஆனால், இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். எனது கட்சி, அரசுப் பணிகளை கடந்த 5 நாட்களாக முடக்கி உள்ளனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, எதிர்க்கட்சியினரை அச்சுறுத்த வருமான வரித் துறையை பயன்படுத்துகின்றனர்.

காசா கிராண்ட் நிறுவனம், அப்பாசாமி விடுதி ஆகியவற்றுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. கோவை மீனா ஜெயக்குமார் குடும்பத்தையும், எனது குடும்பத்தையும் தொடர்புபடுத்தி பேசுவது நியாயமா?

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜெயக்குமார், 20 ஆண்டுகளாக ரியஸ் எஸ்டேட் நிறுவனம் நடத்துகிறார் கோவை சென்றால்,என்னை வந்து சந்திப்பார். அவ்வளவுதான் பழக்கம். அபிராமி ராமநாதன் யார் என்றே தெரியாது.

எனது வீடு, மனைவி வீடு, எனது பிள்ளைகள் வீடு, கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சோதனையில், ஒரு பைசா பறிமுதல் செய்திருந்தாலும்கூட, நான் அதற்குப் பொறுப்பேற்று, பதில் சொல்லத் தயாராக உள்ளேன்.

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x