தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நவ.13 விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நவ.13 விடுமுறை
Updated on
1 min read

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவ.13-ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தையில் 1900-க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இச்சந்தைக்கு காய்கறிகளை அனுப்பும் உழவர்களும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்பார்கள் என்பதால் கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு, தீபாவளிக்கு அடுத்த நாளான நவ.13-ம் தேதி விடுமுறை விட வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக கோயம்பேடு சந்தை தக்காளி வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறியதாவது: விவசாயிகள் குடும்பத்தோடு தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்பார்கள் என்பதால், அன்று காய்கறிகளை பறித்து அனுப்பும் பணிகள் நடைபெறாது.

லாரி ஓட்டுநர்களும் தங்கள் குடும்பத்தோடு தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளனர். அதன் காரணமாக தீபாவளிக்கு அடுத்த நாளான நவ.13-ம் தேதி காய்கறிகள் சந்தைக்கு வராது. அதனால் அன்று கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தீபாவளிக்கு மறுநாள் அமாவாசை தினத்தன்று பெரும்பாலான வீடுகளில் நோன்பு எடுப்பார்கள் என்பதால், கோயம்பேடு சந்தையில் மலர் மற்றும் பழ சந்தைகள் வழக்கம்போல் இயங்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in