

சென்னை: சென்னை, காமராஜர் துறைமுகங்கள் மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, நடத்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான விநாடி-வினா மற்றும் ஆசிரியர்களுக்கான கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் மற்றும் காமராஜர் துறைமுகம் சார்பில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கிஇம்மாதம் 5-ம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டது. இதன் நிறைவுநாள் நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து சென்னை துறைமுகத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரி எஸ்.முரளி கிருஷ்ணன் விவரித்தார். குறிப்பாக, பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்கள் மத்தியில் ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாகவும், ஊழல் தடுப்பை சிறப்பாக அமல்படுத்தும் சிறந்த 5 அரசு துறைகளில் சென்னை துறைமுகமும் ஒன்றாகத் திகழ்வதாகவும் கூறினார்.
காமராஜர் துறைமுக மேலாண் இயக்குநர் ஐரீன் சிந்தியா, ஊழலைத் தடுக்க ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை எடுத்து வரும்நடவடிக்கைகளைப் பாராட்டினார். மேலும், நேர்மையாக செயல்படு பவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அத்துடன், பொதுவாழ்க்கை யில் நேர்மையாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கி னார்.
சென்னை துறைமுக பொறுப்புக்கழகத் தலைவர் சுனில் பாலிவால், பணியிடத்தில் நெறிமுறைகளைப் பின்பற்றுவது, நேர்மையுடன் மற்றும் எளிமையாக வாழ்வதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு,‘இந்து தமிழ் திசை’ நாளிதழுடன்இணைந்து பள்ளி மாணவர்களுக் கான ஆன்லைன் விநாடி - வினா மற்றும் ஆசிரியர்களுக்கான கட்டு ரைப் போட்டி நடைபெற்றது.
இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிமாணவ, மாணவியர் பங்கேற்றனர்.விநாடி-வினா போட்டியில் இளநிலைப் பிரிவில் 43 பள்ளிகளைச் சேர்ந்த 109 மாணவர்களும், முதுநிலைப் பிரிவில் 49 பள்ளிகளைச்சேர்ந்த 96 மாணவர்களும் பங்கேற்றனர். இதில், இளநிலைப் பிரிவில் 6 மாணவர்களும், முதுநிலைப் பிரிவில் 6 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
கட்டுரைப் போட்டியில் 19 பள்ளிகளைச் சேர்ந்த 167 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதில், 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுனில் பாலிவால் பரிசுகளை வழங்கினார்.