சென்னை | மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு நவ.13-ல் இறைச்சி கூடங்களுக்கு விடுமுறை

சென்னை | மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு நவ.13-ல் இறைச்சி கூடங்களுக்கு விடுமுறை
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை (கால்நடை மருத்துவப் பிரிவு) கட்டுப்பாட்டில் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட 4 இடங்களில் இறைச்சிக் கூடங்கள் இயங்கி வருகின்றன. வரும் 13-ம் தேதி மகாவீர் நிர்வான் நாளை முன்னிட்டு அரசு உத்தரவின்படி அந்த 4 இறைச்சிக் கூடங்களும் மூடப்படுகின்றன.

இதேபோல், ஜெயின் கோயில்களிலிருந்து 100 மீட்டர் சுற்றளவில் உள்ள இறைச்சி கடைகளும் மூடப்பட்டு, இறைச்சி விற்பனை தடை செய்யப்படுகிறது. இந்த உத்தரவை செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு வியாபாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in