கல்வியும் மருத்துவமும்தான் திராவிட மாடலின் இரு கண்கள்: செய்திகளை சுட்டிக்காட்டி முதல்வர் பெருமிதம்

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: கல்வியும் மருத்துவமும் தான் திராவிட மாடலின் இரு கண்கள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நான் முதல்வன், மருத்துவ காப்பீட்டு திட்ட செயல்பாடுகள் இருப்பதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட சமூக ஊடகப்பதிவில் கூறியிருப்பதாவது: கல்வியும், மருத்துவமும்தான் திராவிட மாடலின் இரு கண்கள் என்பதை நான் அடிக்கடி சொல்வதுண்டு.

அதனை மெய்ப்பிக்கும் வகையில் வெளியான ஒரு செய்தியில், ‘‘நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 3,300 அரசுப் பள்ளி மாணவர்கள் சிஎல்ஏடி (CLAT) தேர்வெழுதுவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.4 ஆயிரத்தை அரசே செலுத்தி, அவர்களுக்கு இலவசப் பயிற்சியையும் வழங்கவுள்ளது. நாட்டின்முதன்மை உயர்கல்வி நிறுவனங்களிலும், அரசின் உயர் பொறுப்புகளிலும் நமது மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக நாம் மேற்கொண்டு வரும் பல திட்டங்களில் ஒரு சிறுதுளிதான் இது” என கூறப்பட்டுள்ளது.

மற்றொரு செய்தியில்,” நாட்டுக்கே முன்னோடியாக 2009-ல் மு.கருணாநிதி, ஏழை எளியோரின்உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கி வழிகாட்டினார். 2015-16-ல்தான் மத்திய அரசு இப்படி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

விரிவான மருத்துவக் காப்பீடு: தற்போது முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் நமது அரசு மருத்துவமனைகள் நாட்டிலேயே எந்த மாநிலமும் நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்திஉள்ளன. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால் பயனைடைந்தவர்களில் 50 சதவீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நமதுகல்வி, மருத்துவத் துறைகளின் சாதனைகளுக்கான சான்று மட்டுமல்ல; வெற்றி மணிமகுடம். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in