முக அடையாளம் காணும் செயலி உதவியுடன் தீபாவளி பாதுகாப்பு பணியில் 18,000 போலீஸார்

முக அடையாளம் காணும் செயலி உதவியுடன் தீபாவளி பாதுகாப்பு பணியில் 18,000 போலீஸார்
Updated on
1 min read

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்புப் பணியில்18 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களான தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல், குற்றத் தடுப்பு முறைகள், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகிய முப்பரிமாண பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படைமற்றும் ஊர்காவல் படை வீரர்கள்என சுமார் 18,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய பகுதியில் மொத்தம் 4 ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பழைய குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக முக அடையாளம் காணும் செயலி கொண்ட செல்போன் மூலம் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். மேலும், போலீஸார் தங்களுக்குள் வாட்ஸ்-அப் குழு தொடங்கிமுக்கிய நிகழ்வுகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல்களைப் பரிமாறி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in