Published : 08 Nov 2023 06:24 AM
Last Updated : 08 Nov 2023 06:24 AM

தாம்பரத்தில் பொறியியல் பணி: கடற்கரை - தாம்பரத்துக்கு இயக்கப்படும் ரயில் ரத்து

சென்னை: சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில், தாம்பரம் யார்டில் பொறியியல் பணி காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை கடற்கரை- தாம்பரத்துக்கு நவ.8, 9, 10, 13, 14, 15, 16, 17, 20, 21,22, 23, 24 ஆகிய தேதிகளில் இரவு 11.59மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ரத்துசெய்யப்பட உள்ளது. தாம்பரம்-சென்னைகடற்கரைக்கு நவ.8, 9, 10, 13, 14, 15, 16,17, 20, 21, 22, 23, 24 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை கடற்கரை-தாம்பரத்துக்கு நவ.19-ம் தேதி இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், தாம்பரம்-சென்னைகடற்கரைக்கு அதேநாளில் இரவு 11.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ஆகிய 2 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x