தீபாவளி பண்டிகையையொட்டி நவ.10-ம் தேதி தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்

தீபாவளி பண்டிகையையொட்டி நவ.10-ம் தேதி தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்
Updated on
1 min read

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நவ.10, 17, 24 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமைகளில்) சிறப்பு கட்டண ரயில் (06061) இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு கட்டண ரயில், இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவிலை அடையும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.

அதேபோல, நாகர்கோவிலில் இருந்து நவ.11, 18, 25 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகளில்) பிற்பகல் 2.45 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06062) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு மங்களூர் சந்திப்பை அடையும். இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, குழித்துறை, திருவனந்தபுரம், கொல்லம், காசர்கோடு வழியாக மங்களூர் சந்திப்பை அடையும். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in