Published : 08 Nov 2023 06:12 AM
Last Updated : 08 Nov 2023 06:12 AM

கமல்ஹாசனின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குடிநீர் இயந்திரம் வழங்கல்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது 69-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் மதிப்பில், காற்றின் ஈரப்பதத்தில் இருந்து சுத்தமான நீரை தயாரித்து வழங்கும் ‘வாயு ஜல்’ என்ற குடிநீர் இயந்திரத்தை வழங்கினார்.

அப்போது, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறைஅமைச்சர் பி.கே.சேகர்பாபு, எழும்பூர் தொகுதி எம்எல்ஏ இ.பரந்தாமன், மநீம கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர்கள் மவுரியா, தங்கவேலு, மாநிலச் செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ, ஊடகப்பிரிவு மாநில செயலாளர் முரளி அப்பாஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறும்போது, “இந்த மருத்துவமனைக்கு ‘வாயு ஜல்’ எனும் ஓர் இயந்திரத்தை வழங்கியிருக்கிறோம். இதுபோல்தொடர்ந்து செய்வதற்கு, என்னஉதவிகள் கேட்டாலும் நாங்கள்செய்வோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x