Published : 07 Nov 2023 09:40 AM
Last Updated : 07 Nov 2023 09:40 AM

நெல்லை, தென்காசியில் மழை நீடிப்பு - குற்றாலம் அருகே 50 ஏக்கர் நெற்பயிர் சேதம்

குற்றாலம் அருகே காசிமேஜர்புரத்தில் மழையில் சேதமடைந்த நெற் பயிர்களை விவசாயிகள் கவலையுடன் பார்வையிட்டனர்.

திருநெல்வேலி / தென்காசி: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 34 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): அம்பா சமுத்திரம் - 26, சேரன் மகாதேவி - 2.60, மணி முத்தாறு - 9, நாங்கு நேரி - 2.60, ராதாபுரம் - 10, திருநெல்வேலி - 10.20, கன்னடியன் அணைக்கட்டு - 20.80, களக்காடு- 7.60, மூலைக்கரைப்பட்டி - 25, நாலுமுக்கு - 9, ஊத்து பகுதியில் 7 மி.மீமழை பதிவானது.

பாப நாசம் அணைக்கு விநாடிக்கு 728 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 404 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. அணை நீர்மட்டம் 88.95 அடியாக இருந்தது. மணி முத்தாறு அணைக்கு விநாடிக்கு 230 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது அணையிலிருந்து 10 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. அணை நீர்மட்டம் 59.95 அடியாக இருந்தது.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக தென்காசியில் 124 மி.மீ. மழை பதிவானது. ஆய்க் குடியில் 99 மி.மீ., சிவகிரியில் 58 மி.மீ., செங்கோட்டையில் 26 மி.மீ., கடனாநதி அணையில் 21 மி.மீ., குண்டாறு அணையில் 13 மி.மீ., கருப்பாநதி அணையில் 12.50 மி.மீ., ராம நதி அணையில் 12 மி.மீ., அடவிநயினார் அணையில் 1 மி.மீ. மழை பதிவானது.

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் நேற்று 2 அடியும், ராமநதி அணை, கருப்பாநதி அணை நீர்மட்டம் தலா 3 அடியும் உயர்ந்தது. குற்றாலம் பிரதான அருவி, பழைய குற்றாலம் அருவியில் நேற்று இரண்டாவது நாளாக வெள்ளப் பெருக்கு நீடித்தது. இதனால் இந்த அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

குற்றாலம் அருகே காசிமேஜர்புரம் கிராமத்தில் உள்ள கீழபாட்டை தாமரை குளம் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 50 ஏக்கர் நெற் பயிர்கள் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையில் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வேளாண், வருவாய்த் துறை அதிகாரிகள் விவசாய நிலங்களை பார்வையிட்டு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x