

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்க துறையினரால் கடந்த ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அவரது ஜாமீன் மனுவையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரு முறை தள்ளுபடி செய்த நிலையில், உயர் நீதிமன்றமும் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நவ.20-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பு புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து, அவரின் நீதிமன்ற காவலை நவ.22-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பத்தாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.