நாகாலாந்து போலீஸார் நடவடிக்கை எடுக்கும் முன்பு ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

நாகாலாந்து போலீஸார் நடவடிக்கை எடுக்கும் முன்பு ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
Updated on
1 min read

திருச்சி: நாகாலாந்து மக்களை அவமானப்படுத்தும் வகையில் பேசிய திமுகவின் ஆர்.எஸ்.பாரதி மீது நாகா லாந்து போலீஸார் நடவடிக்கை எடுக்கும் முன்பு, அவரை தமிழகபோலீஸார் கைது செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர்அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஸ்ரீரங்கத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழகத்தில் பெட்ரோல் வெடிகுண்டு, நாட்டு வெடிகுண்டு வீசுபவர்களையும், செயின் பறிப்பு திருடர்களையும், திருநெல்வேலியில் பட்டியலினத்தவர் மீது சிறுநீர் கழித்தவர்களையும் கைது செய்ய போலீஸாருக்கு நேரமில்லை. அதேநேரம்,பாஜகவினரைக் கைது செய்வதில் தமிழக காவல் துறை கவனம் செலுத்துகிறது. அந்த அளவுக்கு திமுக ஆட்சியில் தமிழக காவல் துறை தரம் தாழ்ந்து போய்விட்டது.

நாகாலாந்து மக்களை அவமானப்படுத்தும் வகையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது. நாகாலாந்தில் யாராவது ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், அவரை153-ஏ சட்டப்பிரிவில் ஜாமீனில்வெளிவர முடியாத வகையில் கைதுசெய்ய முடியும். எனவே, நாகாலாந்து போலீஸார் நடவடிக்கை எடுக்கும் முன்பு, தமிழக போலீஸார் ஆர்.எஸ்.பாரதியைக் கைது செய்ய வேண்டும்.

கரூருக்கு ரூ.60 லட்சம் பணம் வாங்கத்தான் நான் வந்ததாக கரூர் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார். இது தரம்தாழ்ந்த விமர்சனம். ஜோதிமணிக்கு தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்தது யார்? அந்தப் பணம் எப்படி வந்தது? என ஆதாரத்துடன் கூற என்னால் முடியும். ஜோதிமணி ஒரு பெண் என்பதால் பிழைத்துப் போகட்டும் என விட்டுவிடுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அயோத்திக்கு சிறப்பு ரயில்: இதற்கிடையே புதுக்கோட்டை,கந்தர்வக்கோட்டையில் நேற்று இரவு ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும்போது, ‘‘அயோத்தி ராமர் கோயிலில் 2024 ஜன.22-ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதன் பிறகுதமிழகத்தில் இருந்து 60 நாட்களுக்கு தினமும் அயோத்திக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். அதற்கான முழு செலவையும் பாஜக ஏற்கும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in