புதுச்சேரி | முன்னாள் எம்.பி கண்ணன் காலமானார்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி அரசியலில் ஆளுமை மிக்கவராக திகழ்ந்த முன்னாள் எம்.பி கண்ணன் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் சபாநாயகரும், அமைச்சரும், எம்.பி.யுமான கண்ணன், நிமோனியாவால் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:51 மணி அளவில் காலமானார். இதனை அவர் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு நுரையீரல் நோய் பாதிப்பு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் பாஜகவுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் அறவே இல்லை என சொல்ல அக்கட்சியில் இருந்து கண்ணன் விலகியது குறிப்பிடத்தக்கது.

உடல்நலக்குறைவால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்த சூழலில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். முன்னாள் சபாநாயகர், முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in