ராஜபாளையம் ராக்காச்சி அம்மன் கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக ராக்காச்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து பாய்ந்த வெள்ளம்.
ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக ராக்காச்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து பாய்ந்த வெள்ளம்.
Updated on
1 min read

ராஜபாளையம்: ராஜபாளையம்: ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக ராக்காச்சி அம்மன் கோயில் ஆறு மற்றும் அணைத்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அய்யனார் கோயில் மற்றும் ராக்காச்சி அம்மன் கோயில் உள்ளது. மலையடிவாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மா, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் கனமழையால் அய்யனார் கோயில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மலைப் பகுதியில் நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக ராக்காச்சி அம்மன் கோயில் ஆறு, அணைத்தலை ஆறு மற்றும் மலையில் உருவாகும் நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ராஜபாளையத்திலிருந்து ராக்காச்சி அம்மன் கோயில் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்தை வெள்ளநீர் மூழ்கடித்தது. விளைநிலங்களுக்கு சென்ற விவசாயிகள் திரும்பி வருவதில் சிரமத்தை சந்தித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in