Published : 04 Nov 2023 05:09 AM
Last Updated : 04 Nov 2023 05:09 AM

தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர் வீடுகளில் சோதனை

வருமான வரி சோதனை நடத்தப்பட்ட, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அமித் என்பவரின் அடுக்குமாடி குடியிருப்பு. படம்: ம.பிரபு

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடையவர்களின் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

சென்னை திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம், அந்நிறுவன அதிகாரிகளான திருவல்லிக்கேணி அமுதசேகரன், பட்டினப்பாக்கம் தினகரன் வீடுகள், தியாகராய நகரில் அப்பாசாமி ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரவி அப்பாசாமி வீடு, அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரெசிடென்சி டவர் நட்சத்திர ஓட்டல், ரெசிடென்சி ஒட்டல், கோட்டூர்புரம் அப்பாசாமி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் வீட்டில் சோதனை நடந்தது.

சென்னை அண்ணா நகர் மேற்கில் கட்டுமான தொழிலதிபர் கமலாகர் ரெட்டி வீடு, ஷெனாய் நகரில் வசிக்கும் திருவண்ணாமலை மாவட்ட தொழிலதிபர் செவ்வேல், புரசைவாக்கத்தில் டிவிஎச் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒப்பந்ததாரர் அமித், வேப்பேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஃபைனான்சியர் கமல் ஜெயின் வீடுகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

திருவண்ணாமலையில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர் துரைவெங்கட் வீடு, அலுவலகம், தண்டராம்பட்டு அடுத்த வரகூரில் கிரானைட் நிறுவனம், விழுப்புரம்கிழக்கு சண்முகாபுரம் காலனியில்கிரானைட் தொழிலதிபர் பிரேம்நாத் வீடு, அவரது சொகுசு விடுதி, வழுதரெட்டியில் உள்ள கிரானைட் கடை, கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள மோட்டார் விற்பனை நிலையத்திலும் சோதனை நடந்தது.

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரத்தில் பார்சன் குடியிருப்பு வளாகத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜெயக்குமார், அவரதுமகன் ஸ்ரீராம் வீடுகளிலும் சோதனை நடந்தது. ஜெயக்குமாரின் மனைவி மீனா, திமுககலை இலக்கிய பகுத்தறிவு பிரிவில் மாநில துணை செயலாளராக உள்ளார்.

சிங்காநல்லூர் பகுதி திமுகசெயலாளர் எஸ்.எம்.சாமி வீடு,சவுரிபாளையத்தில் உள்ள கட்டுமான நிறுவனம், கரூரில் வேலுஉதவியாளர் சுரேஷ் வீடு, காந்திபுரத்தில் உள்ள அவரது நிதி நிறுவனம், கரூர் பெரியார் நகரில்முன்னாள் எம்எல்ஏ வாசுகியின் சகோதரி பத்மா வீடு, தோட்டக்குறிச்சி முன்னாள் பேரூராட்சி தலைவர் சக்திவேல் வீட்டிலும் சோதனை நடந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x