Published : 04 Nov 2023 06:10 AM
Last Updated : 04 Nov 2023 06:10 AM
சென்னை: சென்னை, புறநகரில் பெய்த மழையால் விமான சேவை பாதிக்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், சென்னை விமான நிலைய நுழைவு வாயில் பகுதியில் மழை நீர்தேங்கியது. இதனால், பயணிகள் மற்றும் அவர்களை வழியனுப்ப வந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.
அதேபோல் டெல்லி, பெங்களூரு, விசாகப்பட்டினம், அந்தமானில் இருந்த வந்த 4 விமானங்கள் பலத்த மழை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பறந்து கொண்டிருந்தன. வானிலை சீரானதும் வட்டமடித்து பறந்து கொண்டிருந்த விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தரைஇறங்கின.
சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி, ராஜமுந்திரி, சிலிகுரி, புனே, மும்பை உட்பட 7 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT