Published : 04 Nov 2023 06:21 AM
Last Updated : 04 Nov 2023 06:21 AM
திருநெல்வேலி: தென் மாவட்டங்களில் நடைபெறும் சாதி வன்முறைகளை கண்டித்து வரும் 18-ம் தேதி திருநெல்வேலியில் கண்டன பேரணி நடைபெறும் என்று, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். புதிய தமிழகம் கட்சியின் பூத் கமிட்டி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசால் நடத்தப்படக்கூடிய மதுபான கடைகளால் நாளுக்கு நாள் மதுப்பழக்கம் அதிகரித்து வருகிறது. பூரண மதுவிலக்கை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டிசம்பர் 15-ம் தேதி சிறப்பு மாநாடு நடத்தப்படும். தென்தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
திருநெல்வேலி மணிமூர்த்தீஸ் வரம் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் 2 இளைஞர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை சம்பவம் கடுமையான கண்டன த்துக்குரியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண் டனை பெற்றுத்தரப்பட வேண்டும்.
தென் மாவட்டங்களில் நடைபெறும் தொடர் சாதிய வன்முறைகளை கண்டித்து வரும் 18-ம் தேதி திருநெல்வேலியில் பேரணி நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT