Published : 02 Jul 2014 09:46 AM
Last Updated : 02 Jul 2014 09:46 AM

மேலும் 200 அம்மா உணவகம்: 2 மாதங்களில் திறக்க மாநகராட்சி நடவடிக்கை

சென்னையில் மேலும் 200 அம்மா உணவகங்கள் அமைப் பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் இன்னும் 2 மாதங் களில் உணவகங்களை திறப்பதற் கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.

ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவு கிடைப்பதற்காக சென்னை உள்ளிட்ட அனைத்து மாநக ராட்சிகளிலும் ‘அம்மா உண வகம்’ திறக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வார்டுக்கு ஒன்று வீதம் 200 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர 3 அரசு மருத்துவமனை களிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், வார்டுதோறும் மேலும் ஒரு அம்மா உணவகம் திறக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. அதன்படி, உணவகங்கள் அமைப்பதற்கான இடங்களை மாநகராட்சி தேர்வு செய்துள்ளது.

புதிய கட்டிடங்களில்

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

முதல்கட்டமாக அமைக்கப் பட்ட உணவகங்கள், மாநகராட் சிக்கு சொந்தமான பயன்படுத் தப்படாத கட்டிடங்களில் அமைக் கப்பட்டன.

இந்த முறை, சுமார் 40 உணவகங்கள் மட்டுமே ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டிடங்களில் அமைக்கப்பட உள்ளன.

மற்ற உணவகங்கள் மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களில் புதிதாக கட்டப்பட உள்ளன. தரைதளம் மட்டும்தான் தேவை என்பதால், வேலைகள் இன்னும் 45 நாட்களில் முடிந்து விடும்.

குடிசைப் பகுதிகளுக்கு அருகில் உணவகங்களை அமைக்க முயன்று வருகிறோம். புதிய உணவகங்கள் 2 மாதங்களில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் கீழ்ப்பாக்கம், ராயப் பேட்டை அரசு மருத்துவ மனைகள், ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஆகிய இடங்களிலும் அம்மா உணவகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x