

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 4.2ஏக்கர் விவசாய நிலங்கள், பழநிசண்முக நதி மற்றும் கோதைமங்கலம் கிராமத்தில் ஆக்கிரமிப்பில் இருந்தன.
ஆக்கிரமிப்பு நிலங்களைமீட்டு, கோயில் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்குமாறு அறநிலையத் துறை இணை ஆணையர்பாரதி உத்தரவிட்டார். அதன்படி,உதவி ஆணையர் சுரேஷ் மற்றும்வருவாய்த் துறை அதிகாரிகள்,ரூ.2 கோடி மதிப்பிலான 4.2ஏக்கர் நிலங்களை மீட்டு, பழநி கோயில் உதவி ஆணையர் லட்சுமியிடம் ஒப்படைத்தனர்.